×

தா.பழூர் அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் தா.பழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தா.பழூர் சுத்தமல்லி மெயின்ரோடு பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆய்வு மேற்கொண்டனர். இதில் சின்னையன் மகன் சரண்ராஜ்(27) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 88 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரண்ராஜை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Bhaur ,
× RELATED விக்கிரமங்கலம் அருகே மயானத்தில் இறந்து கிடந்த முதியவர்