×

வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா விடையாற்றி ஊஞ்சல் உற்சவம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 13ம்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமிகள் வீதியுலா நடந்தது. முக்கிய திருவிழாக்களான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழாவும், தேர் திருவிழா, தெப்பத் திருவிழா ஆகியவை நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோயில் உள்ளே நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு தீபாரதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரணீ ஆதினம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Vedaranyeswarar Temple Masimagam festival ,Oonchal Utsavam ,
× RELATED திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி...