×

பொம்மிநாயக்கன்பட்டியில் தரமற்ற குடிநீர் மேல்நிலைத்தொட்டி விசாரணை நடத்த கோரிக்கை

தேனி, மார்ச். 14: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தரமற்றதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டதாக பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சேர்ந்த 3 வது வார்டு மன்ற உறுப்பினர் பேச்சியம்மாள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்தத் குடிநீர் மேல்நிலைத் தொட்டி தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதால் மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் சொட்டுசொட்டாக விழுந்து வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் எனது 3 வார்டில் அடிப்படை வசதிகளை மன்ற நிர்வாகம் செய்து தருவதில்லை. சுகாதார பணிகளை மேற்கொள்வதில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தரமற்ற குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டியிருப்பது குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Pomminayakanpatti ,
× RELATED டம்டம்பாறை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயம்