திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து 240 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து கலெக்டர், மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.5,75,000 மதிப்பிலான தொழில் கடனுதவிகள், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,650 மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகள் மொத்தம் ரூ.6,82,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் காசிசெல்வி, கலால் உதவி ஆணையர் ஜெயசந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
