×

பழநி அருகே மனைவி கண் முன் கணவர் பலி

பழநி, மார்ச் 14: பழநி அருகே கார் மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவர் பரிதாபமாக இறந்தார்.பழநி கணபதி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (38). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி காளீஸ்வரி (35), மகன் முகேஸ் (14) ஆகியோருடன் டூவீலரில் கீரனூரில் இருந்து பழநிக்கு புதுதாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தார். புளியம்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த கார், இவர்களது டூவீலர் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த காளீஸ்வரி சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் முகேஸ் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Palani ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு