×

கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு ஆர்வத்துடன் எழுதிய மாணவிகள்

கந்தர்வகோட்டை,மார்ச் 14: கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வை மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. அதனை தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை தலைவருமான முருகாயி தேர்வினை நடத்தினர். தேர்வில் 15 துணை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
இப்பள்ளியை சேர்ந்த 293 மாணவிகள் ஆர்வத்துடன் பதட்டம் இல்லாமல் தேர்வினை எழுதினர். தேர்வுக்கு முன்பாகவே மாணவிகளுக்கு ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழுவினரும், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும் மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கியதால் மனக்குழப்பம் இல்லாமல் மாணவிகள் தேர்வு எழுதினார்.

Tags : Gandharvakota Government Girls Higher Secondary School ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை