பெரம்பலூர், மார்ச் 14: பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலக கூட்ட அரங் கில் பொது மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நேற்று(13ம்தேதி)நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்து பேசியதாவது: அரசின் சார்பில் செயல்படு த்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வே ண்டும். வாரந்தோறும் பெ றப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து அடுத்த வார மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்ப டும். உரிய காரணங்கள் ஏதுமின்றி பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக் கை எடுக்க தாமதாகும் பட் சத்தில்சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் உரிய விளக் கம் கோரப்படும். எனவே, அ லுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களின் மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட் டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற் ற விவசாயக் கூலி உதவி த்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி 349மனுக்கள் பெறப்பட் டது என்றார்.
