×

தேர்வு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு: அரியலூரில் 8,728 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர்

அரியலூர், மார்ச் 14: அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 87 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 4,430 மாணவர்களும், 4,661 மாணவிகளும் என ஆக மொத்தம் 9,091 மாணவ-மாணவிகள் 44 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதேபோன்று தனித்தேர்வர்கள் 40 ஆண்களும், 52 பெண்களும் என மொத்தம் 92 நபர்கள் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்.

இதில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 4,167 மாணவர்களும், 4,478 மாணவிகளும் என மொத்தம் 8,645 மாணவ-மாணவிகள் எழுதினர். மேலும் 263 மாணவர்களும், 183 மாணவிகளும் என மொத்தம் 446 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று தனித்தேர்வர்களில் 34 ஆண்களும், 48 பெண்களும் என மொத்தம் 82 நபர்கள் தேர்வு எழுதினர். மேலும் 6 ஆண்களும், 4 பெண்களும் என மொத்தம் 10 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத 4,471 மாணவர்களும், 4,713 மாணவிகளும் என மொத்தம் 9,184 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,202 மாணவர்களும், 4,526 மாணவிகளும் என மொத்தம் 8,728 பேர் தேர்வினை எழுதினர். மேலும் 269 மாணவர்களும், 187 மாணவிகளும் என மொத்தம் 456 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுப்பணிகள் சார்ந்து தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவ - மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பேருந்து வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் கண்ணன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Ariyalur ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...