×

சர்வதேச மைய மரபணு பொறியியல் இயக்குனர் தகவல் ஏடிஎம் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 13: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம் மையங்கள் ஆயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன. மேற்படி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் தினசரி செலவுக்கு தொகை எடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வங்கிகளிலும் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்துவிட்டது.

இதனால் வங்கிகளும் தினசரி ஏடிஎம் லாக்கரில் தனியார் செக்யூரிட்டிகள் மூலம் வாடிக்கையாளருக்கு உதவ லட்சக்கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர். குறிப்பாக நகர மற்றும் அதன் எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் தனியார் செக்யூரிட்டி மூலம் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பல இடங்களில் அந்த காவலரும் இருப்பதில்லை. இதனால் வங்கிகளுக்கு ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட்டுள்ள பெருந்தொகைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் ஏடிஎம் மையங்களில். முகமூடி அணிந்து பணத்தை கொள்ளை அடிப்பதும் மிஷினை உடைத்து அப்படியே எடுத்து சொல்வதும் வழக்கமாக உள்ளது.

ஆயுதம் இல்லா தனியார் காவலர்களுக்கு உயிர் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களில் அமைக்க பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் வங்கி கொள்ளையர்கள் செயல் இழக்க வைத்து விடுவதால் கொள்ளையர்களை கண்டுபிடிக்கவும் இயலவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்படுத்தாமையால் வங்கியில் உள்ள பொதுமக்கள் சேமிப்பு தொகை விரயமாகக நேரிடுகிறது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட வங்கி தனியார் காவலர்கள் சங்கத்திலிருந்து பொதுமக்கள் பணத்தை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு கோரிக்கை வந்துள்ளது.

இதற்குரிய செலவினை வங்கிகள் சுலபமாக ஏற்று கொள்ளும். கொள்ளையர்களை சுட்டு பிடிக்க அதிகாரம் அளிக்கப்பட்டால் தான் கொள்ளைகளை கட்டுப்படுத்த காவல் துறையினரால் இயலும். ஆதலால் திருவாரூர் மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட கலெக்டர் வங்கி நிர்வாகங்களுடன் கலந்து ஆலோசித்து ஏடிஎம் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலரை இரவு நேர காவல்பணிக்கு நியமிக்க வேண்டும். அதற்குரிய செலவுகளை தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏற்க வேண்டும்.

Tags : International Center for Genetic Engineering ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை