×

தென்காசி மாவட்டத்தில் 200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

நெல்லை, மார்ச் 13: தென்காசி மாவட்டத்தில் 200 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு ஒருவரை கைது செய்தனர். நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா, எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ஒரு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திலுள்ள வீட்டருகே போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு 200 கிலோ ரேஷன் அரிசி மூடைகளாக பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பெருமத்தூர் நடுத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

Tags : Tenkasi ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை