×

தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு

ஊட்டி: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்டிட மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா ஊட்டி மார்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் நேற்று நடந்தது.  தமமுக., மாவட்ட செயலாளர் மற்றும் தொழிற்சங்க  பொது செயலாளர் ஊட்டி சிவா தலைமை வகித்து கொடியேற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் தமமுக., இளைஞரணி இணை செயலாளர் தென்னரசு, தொழிற்சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ஸ்டேன்லி அருள்தாஸ், பொருளாளர் பாலசுப்பிரமணியன், தமமுக., மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Union Name Board ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி