×

தொட்டியம் அருகே கோயில்களில் கும்பாபிஷேக விழா

தொட்டியம்: தொட்டியம் தாலுக்கா ஏழூர்பட்டி, மாராட்சி பட்டி, குண்டுமணி பட்டி, அழியாபுரம் பகுதியில் உள்ள விநாயகர், மாரியம்மன், அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், இளங்காளி பிடாரி அம்மன், கருப்பண்ணசாமி ஆகிய நான்கு திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அப்பகுதி பக்தர்களால் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாஜனம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, வேத பாராயணம், யாக வேள்வி,மகா தேவராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் ஏழூர்ப்பட்டி, மாராச்சிபட்டி, குண்டுமணிபட்டி, அழியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அருள்ட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kumbabhishekam ,Thaniyam ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்