×

விவேகானந்தம் வித்தியாஷ்ரம் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

திருவாரூர்: திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் போதி வளாகத்தில் இயங்கி வரும் விவேகானந்தம் வித்தியாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலை பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி தாளாளர் ஜனகமாலா தலைமையிலும், முதல்வர் மகாலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மழலையர் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்து வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vivekanandam ,Vidyashram School ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை