ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே சேதுராயன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறபு விருந்தினராக திராவிட செல்வன் கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி மன்றதலைவர் சிவானந்தம் மற்றும் உறுப்பினர்கள், கல்வி வளர்ச்சி குழு தலைவர் வேணுகோபால் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் மாணவர் சுப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியர், ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொது மக்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
