×

அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வேதாரண்யம்: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் தாலுக்கா கடிநெல்வயல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விளக்கி பேசப்பட்டது. ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Tags : Anna Revival ,Project Coordination Committee ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை