×

வெள்ளியணை அருகே தூக்கு போட்டு பிளஸ்2 மாணவி தற்கொலை

கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே தீராத வயிற்று வலி காரணமாக பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள துளசிகொடும்பு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(55). இவரின் மகள் விமலா(17). இவர், ஜெகதாபி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாணவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மாணவி, கடந்த 10ம்தேதி இரவு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Velliyani ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...