×

ஊட்டியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, மார்ச் 11: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தினேஷ்குமார் வரவேற்றார். பசுபதி, எட்வின், கணேசன்,  சசிகுமார், காளிமுத்து, யுவராஜ் மற்றும் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி கே-505 கூட்டுறவு பண்டக சாலை, தலைவர் ஆட்குறைப்பு என்ற பெயரில் அமுதவல்லி, ராமசந்திரன், அந்தோணிதாஸ் ஆகியோரை பணி நீக்கம் செய்து 4 புதிய பணியாளர்கள் ேதவைப்பட்டியல் கொடுத்து அறிவிப்பு செய்தது கண்டிக்கத்தக்கது.

 பெண் பணியாளர்களை வெளியில் சொல்ல முடியாத நிலையில் ெதால்லை ஏற்படுத்தி அதன் மூலம் பழிவாங்கும் செயலை கண்டித்தும், நீலகிரி மாவட்ட கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும், மேலாளரின் நடவடிக்கைகளை எடுத்துரைக்கப்படும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டி ஏற்படுத்தி விசாரணை நடைபெறாமல் இதுவரை மவுனமாக இருவதை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில், நிர்வாகிகள் சங்கர், சதாசிவம், தங்கபூமி, அண்ணாதுரை, சுவாமிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில், காளியப்பன், செல்வராஜ், ராமு, ராதிகா, நாகமாணிக்கம், குமார், திருப்பதி, ரவி, கணேசன், பிரகாஷ், சீனுசரணவன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி