×

மாவட்ட மைய நூலகத்தில் நாளை கதை சொல்லி நிகழ்ச்சி, சதுரங்க பயிற்சி

திருச்சி, மார்ச் 11: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்க பயிற்சி வகுப்புகளும் கட்டணமின்றி நடத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்க பயிற்சி வகுப்புகளும் கட்டணமின்றி நடத்தப்பட்டு வந்தது. கொரோனாதொற்று காரணமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது நூலகத்தில் கதை சொல்லி நிகழ்ச்சியும், சதுரங்கப் பயிற்சியும் மீண்டும் நாளை (12ம் தேதி) மைய நூலகத்தில் துவங்கப்பட உள்ளது.

காலை 10.30 மணிமுதல் 11.30 வரை சதுரங்க பயிற்சியும், 11.30 மணி முதல் 12.30 மணிவரை கதை சொல்லி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சதுரங்க பயிற்சியினை சங்கரா அளிக்க உள்ளார். மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சியினை ஆசிரியை வித்யா நடத்த உள்ளார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 9344754036 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : District Central Library ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...