×

மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு திருவாரூரில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம்

திருவாரூர், மார்ச். 11: திருவாரூர் மாவட்டத்தில் இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதி ப்பால் பொதுமக்கள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மற் றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.உடல் வலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச் சலின் அறிகுறியாக உள்ளது. இந்த காய் ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை தாக்கி வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங் களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப் படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் திருவாரூர் கிடாரன்கொண்டான் ஆலடி ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமில், டாக்டர் குருசேவ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கல ந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சோ லை புருசோத்தமன் செய்திருந்தார்.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் கூறுகையில், மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1285 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 நபர்களுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கி மூன்று நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்த பட்டது என்றனர்.

Tags : Central University Vice-Chancellor Speech Viral Fever Prevention Camp ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...