×

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வேலாயுதம்பாளையம் அருகே விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம், மார்ச் 11: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் உள்ள விநாயக பெருமானுக்கு சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச் சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், உப்புப்பாளையம், புன்னம், தவுட்டுப்பாளையம், திருக்காடுதுறை மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Vinayakar Temple ,Vishanam Velayuthampalayam ,
× RELATED தூத்துக்குடி விநாயகர் கோயிலில் ஒலிபெருக்கி திருடியவர் கைது