×

ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் அதிரடி கைது

சிவகாசி: சிவகாசியில் பழிக்குபழி வாங்குவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த காந்திராஜனின் சகோதரர் அரவிந்தன் கடந்த 2022ல் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அரவிந்தனை கொலை செய்த நபர்களை பழிக்குப்பழி வாங்குவதற்காக  காந்திராஜன்(26), அவரது நண்பர்கள் சங்கிலி கருப்பன்(30), வைரமுத்து(22) ஆகியோர் கையில் வாள், கத்தியுடன் சுற்றி திரிந்தனர். மூவரையும் திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை