×

கூலி வழங்க கோரி திரண்ட 100 நாள் தொழிலாளர்கள் அதிகாரி சமரசம் தெள்ளார் பிடிஓ அலுவலகத்தில்

வந்தவாசி: வந்தவாசி அடுத்த தெள்ளார் பிடிஓ அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திரண்டு கூலி வழங்காதது குறித்து புகார் மனு அளித்தனர். வந்தவாசி அடுத்த ச ங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த இரு வாரங்களாக பணி செய்தும் இவர்களுக்கான ஊதியம் வங்கி கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் அளிக்காததால் 20க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர். தொடர்ந்து பிடிஓ மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பிடிஓ மூர்த்தி 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் ஆதார் அட்டைகளை இணைக்காததால், கணக்கில் பணம் வரவு வைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

ஆதார் அட்டைகளை இணைத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். ஒரு சிலர் விடுபட்டதால் தான் இந்த பிரச்னை. அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. ஊதியம் வழங்குவதுடன் வேலையும் வழங்கப்படும் எனக்கூறி சமரசம் செய்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags : Adhikari Samarasam Telar PTO ,
× RELATED கூலி வழங்க கோரி திரண்ட 100 நாள்...