×

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலையில் 4 மாவட்டங்களுக்கான (படம் உள்ளது)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நான்கு மாவட்டங்களுக்கான பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ,வேலு பொறுப்பேற்ற பிறகு, திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வகையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் உருவாகி வருகின்றன. அதன்படி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டன.  அதன்தொடர்ச்சியாக, இதுவரை வேலூரில் செயல்பட்டு வந்த பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்ைத நிர்வாக ரீதியாக பிரித்து, திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.

இது, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய திருவண்ணாமலை வட்ட அலுவலகமாக செயல்படும். அதன்மூலம், பொதுப்பணித்துறையின் நிர்வாக பணிகள் எளிதாகி உள்ளதால், துறை சார்ந்த நடவடிக்கைகள் விரைவாகவும், பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் விரைந்து நிறைவேற்றவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, பொதுப்பணித்துைற கண்காணிப்பு ெபாறியாளர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர், திட்டப்பணிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறைக்கான ஒருங்கிணைந்த கட்டிடம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் செங்கம் மு.பெ.கிரி, வந்தவாசி அம்பேத்குமார், செய்யாறு ஓ.ஜோதி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை. வெங்கட், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் குட்டி க.புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றிய செயலாளர் த.ரமணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். கேப்சன்... திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார். உடன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், முதன்மை தலைமை பொறியாளர் ரா.விஸ்வநாத், தலைமை பொறியாளர் க.ஆயிரத்தரசு ராஜசேகரன்.

Tags : Minister ,AV Velu ,Office ,of Public Works Superintending Engineer ,Tiruvannamalai ,
× RELATED விஷச் சாராயத்தால்...