×

கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விற்கப்பட்ட 41 மதுபாட்டில் பறிமுதல்

கரூர், மார்ச் 10: கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 5 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் மாயனூர், வெங்கமேடு மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 41 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மில்லி லிட்டரின் அளவு 7360 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...