மானாமதுரையில் சர்வதேச மகளிர் தின விழா

மானாமதுரை: மானாமதுரையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை பள்ளி மாணவியர்கள் ஊர்வலமாக வந்தனர்.  ஊர்வலத்தில் மகளிர் கல்வி, சுகாதாரம், உரிமை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். செர்டு தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள் உபகரணங்களையும் வழங்கபட்டது. மகளிர் தின விழாவில் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, விவசாய சங்க மாநில தலைவர் அர்ச்சுணன், செயலாளர் ராமமுருகன், செர்டு தொண்டு நிறுவன இயக்குநர் பாண்டி, மகளிர் சுய உதவி குழு தலைவர், பொருளாளர் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ராஜகம்பீரத்தில் நடந்த விழாவில் ராஜகம்பீரம் பள்ளி தலைமை ஆசிரியை லெட்சுமி, ராஜகம்பீரம் ஊராட்சிமன்ற தலைவர் முஜிப்புர் ரஹ்மான், ரஜினிமன்ற மாவட்ட பொருளாளர் கருப்புச்சாமி, கேர்கிவிங் தொண்டு நிறுவனர் சகுபர்சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: