×

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினரின் பணி புறக்கணிப்பு போராட்டம்

மதுரை: மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தில் பணியிறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வை பாதுகாத்து அரசாணை வெளியிட வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பான ஆணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மதுரையில் நேற்று மாலை ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துபாண்டி தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகையன், மாவட்ட செயலாளர் அசோக், பொருளாளர் கோபி, இப்ராஹிம் சேட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கினர்.

Tags :
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை