×

பள்ளப்பட்டி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா

சேலம்: சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மெய்யனூர் ரோட்டில் பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா எடுக்கப்படும். நடப்பாண்டு மாசி திருவிழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி நேற்று சந்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பழம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 வாகனத்தில் சுவாமி சத்தாபரணம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் அனுமன், நந்தி உள்ளிட்ட அலங்காரத்தில் கிராமிய கலைஞர்கள் காட்சியளித்தனர். பொய்கால் குதிரை, மயிலாட்டம் போன்ற கிராமிய கலைகள் கவனம் ஈர்த்தது. இதையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்றிரவு விழா நிறைவு ெபற்றது.  போலீசார் விழிப்புணர்வுஇடைப்பாடி: கொங்கணாபுரம் ஒன்றியம், எருமைபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஜின்னிங் மில்லில் பணி புரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று இன்ஸ்பெக்டர் விஜயசாரதி  மற்றும் எஸ்எஸ்ஐ.,க்கள் தங்கதுரை, செந்தில்குமார் ஆகியோர் கேட்டறிந்தனர். பின்னர், அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை எனில் காவல்துறையை அழைக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Masithruvizha ,Pallapatti Mariamman Temple ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்