×

(தி.மலை) செய்யாற்றில் பள்ளம் எடுத்ததில் மேலும், 2 நுழைவு வாயில் தூண்கள் கண்டெடுப்பு அடுத்தகட்ட ஆய்வுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? கலபாக்கம் அருகே இதுவரை மொத்தம் 42 கற் தூண்கள் கிடைத்தது



கலசபாக்கம், மார்ச் 9: கலசபாக்கம் அருகே செய்யாற்றில் தீர்த்தவாரிக்காக பள்ளம் தோண்டியபோது, இதுவரை 42 கற் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், நேற்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளம் எடுக்கும் போது 2 நுழைவாயில் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிலைகள் ஏதும் கிடைக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பிறகு நடத்திட இப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி செய்யாற்றை சுத்தம் செய்யும் பணியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர். அப்போது கற் தூண்கள் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிடைத்த கற் தூண்கள் பழமை வாய்ந்த சிவ ஆலயங்களில் உள்ள மேல் கூரைகள் போல இருந்தது. மேலும் பழமை வாய்ந்த கோயில் புதை உண்டு உள்ளதா என பொதுமக்கள் ஆதங்கத்துடன் இருந்தனர். தகவல் கிடைத்தவுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சிலைகள் ஏதேனும் செய்யாற்றில் இருந்தால் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுத்தால் சேதம் அடையும் என்பதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு பள்ளம் எடுக்கும் பணியில் ஈடுபடுமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதன் பேரில் நேற்று முன்தினம் பள்ளம் எடுக்கும் பணியில் செய்யாற்றில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கற் தூண்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தான் பள்ளம் வேண்டும் என முடிவு செய்து நேற்று பள்ளம் எடுத்ததில் இரண்டு நுழைவுவாயில் கற் தூண்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து மொத்தம் 42 கற்தூண்கள் கிடைத்துள்ளது. சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல் கல்வெட்டுகள் கிடைத்தால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்து ஆய்வு மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் இருந்தனர். தொடர்ந்து கற் தூண்கள் மட்டும் வருவதால் தற்காலிகமாக இப்பணிகளை நேற்றுடன் முடித்துள்ளனர் இதுகுறித்து குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Th. Malai ,Seyyar ,Kalabakkam ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்