ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி சிவன்மலை பழனி மூட்டை சுவாமிகளின் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு வேள்விகள் யாக பூஜையை ல ஞானகுரு சுவாமி துவக்கி வைத்தார். பின்னர் உச்சி காலபூஜையில் சுவாமி விக்ரகத்திற்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. திருவாசகம் திருமறை படிக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
