×

பரமக்குடியில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி 1200 மாணவர்கள் பங்கேற்பு

பரமக்குடி: பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்பள்ளியில் 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டியில் நடந்தது. போட்டியில் மாணவ,மாணவிகளுக்கு கட்டா போட்டியும், அதேபோல் குமிட்டே போட்டியும் நடைபெற்றது. போட்டியினை ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி என்.போஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பள்ளியின் தாளாளர் லெனின் குமார்,ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொருளாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியினை கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி தலைமை மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் கேரளா,கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உட்பட 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயா பிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை சென்சாய் தத்துக்குமார்,சென்சாய் முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : Paramakudi ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை