விவசாயிகள் மகிழ்ச்சி தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு நெடும்பலம் அரசு பள்ளியில் மகளிர் தின விழாவில் மாணவியை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து சிறப்பு என் வாழ்நாளில் மறக்க இயலாது மாணவி பெருமிதம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா தலைமை ஆசிரியர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.மகளிர் தின விழாவினை முன்னிட்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி தேசிய கொடியினை ஏற்றி வைத்து அம்மாணவி தலைமையாசிரியர் இருக்கையில் மாணவிகள் புடை சூழ அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டார்.ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி செய்யும் வாய்ப்பு மாணவிக்கு வழங்கப்பட்டது.  அது குறித்து மாணவி பிரியதர்ஷினி கூறுகையில் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மாணவியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றச் செய்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து சிறப்பு செய்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க இயலாது என்று கூறினார்.  தலைமையாசிரியர் மாணவிகள் ஆசிரியர்கள் மத்தியில் கேக் வெட்டி மகளிர் தினத்தின் சிறப்புகளை கூறி கொண்டாடினார். மாணவிகள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

Related Stories: