கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம்தேதி துவங்கி 20ம்தேதி வரை நடைபெறுகிறது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம்தேதி துவங்கி ஏப்ரல் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதே போல், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம்தேதி துவங்கி மார்ச் 3ம்தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தடையின்றி மின்சாரம், மாணவ,மாணவிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கோட்டாட்சியர் ரூபினா உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
