×

அய்யனார் கோயிலில் மாசி திருவிழா

கமுதி: கமுதி அருகே நரியன் சுப்புராயபுரம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார், தோப்படை கருப்புசாமி, காளியம்மன் கோயில் 70ம் ஆண்டு மாசிமகத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் பால், தயிர்,சந்தனம்,இளநீர்,பன்னீர், விபூதி,பச்சரிசி,தினை மாவு உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. மாசி மகம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நிறை குளத்து அய்யனார் சுவாமிகளுக்கு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நரியன் சுப்புராயபுரம், அபிராமம், கமுதி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.



Tags : Masi festival ,Ayyanar temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை