×

ஏலாக்குறிச்சி ஊராட்சியில் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

ஜெயங்கொண்டம்: தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மூலம் நமது மாநிலத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் என்கின்ற கோமாரி நோயை தடுக்கின்ற விதமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்ட கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று மார்ச் 1ம் தேதி முதல் 21 வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்திட திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.  

இதனை செயல்படுத்திட அரியலூர் மாவட்டத்தில் 46 குழுக்கள் கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்திட மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது. நேற்று திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஏலாக்குறிச்சி ஊராட்சியில் கரையான் குறிச்சி கிராமத்தில் தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் மீனாம்பிகை சிவானந்தம் துவக்கி வைத்தார். 150 பசு மற்றும் 50 பசு கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடைகளுக்கு கால்நடை ஆதார் என்ற காது வில்லைகள் பொருத்தப்பட்டு அதன் விபரங்கள் கணணியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம், கால்நடை உதவி மருத்துவர் அருண் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags : Elakurichi ,
× RELATED அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு