தேனியில் கலந்தாய்வு கூட்டம்

தேனி: தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் தேனியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில காரிய கமிட்டி உறுப்பினர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் ஆதிசிவபெருமாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அழகுராஜா உறுதிமொழி வாசித்தார். இக்கூட்டத்தின்போது, தேனி மாவட்டத்தில் தினந்தோறும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும்.

ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அனைத்து 108 ஆம்புலன்ஸ்களையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்திட வேண்டும், மாவட்ட மண்டல மற்றும் மனிதவளத்துறை அதிகாரிகளின் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories: