பரமக்குடி: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட சீனியர் பெண்கள் கபடி அணி தேர்வு செய்யப்பட உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் கபடி செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் 69வது மாநில அளவிலான பெண்கள் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 9.3.2023 முதல் 12.3.2023 வரை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இந்த சாம்பியன்ஷி போட்டியில் பங்கு பெற ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் சீனியர் பெண்கள் சாம்பியன்ஷி போட்டி மற்றும் அணி தேர்வு இன்று காலை 9 மணிக்கு பரமக்குடி அரசு கலைக்கல்லூரி (ஐடிஐ பின்புறம்) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட கபடி வீராங்கனைகள் தவறாமல் கலந்து கொள்ளவும், வீராங்கனைகளுக்கு வயது வரம்பு இல்லை, எடை 75 கிலோ, ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
