×

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலையில் பக்கத்து வீட்டுக்காரர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (45). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆறுமுகம் (40). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நின்ற முருகேசனை, ஆறுமுகம் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பிய ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார், சாணார்பட்டி அருகே உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஆறுமுகத்தை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Dindigul ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை