×

மாசி மகத்தை முன்னிட்டு திருவையாறு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்

திருவையாறு: திருவையாறு காவிரி ஆற்றில் நேற்று மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் மாசி மகத்தை முன்னிட்டு புஷ்யமண்டப காவிரி படித்துறையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் குடும்பத்தோடு புனிதநீராடி காவிரி ஆற்று படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். அதன்பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயில் சென்று ஐயாறப்பரை வழிபட்டு பசு மாடுகளுக்கு அகத்திகீரை கொடுத்து விட்டு சென்றனர்.

திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து சுவாமி புறப்பட்டு புஷ்ய மண்டப காவிரி படித்துறையில் சூலபாணிக்கு பல திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து சுவாமி புறப்பட்டு நான்கு வீதிவழியாக சென்று ஐயாறப்பர் கோவிலை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.

Tags : Tiruvaiyar Kaveri river ,Masi Maha ,
× RELATED மகா சிவராத்திரி எதிரொலி பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பேருந்துகள்