×

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் ரூ.6.42 கோடியில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அனுமார் கோவில் சந்து, பர்ஜிமியான் பஜார், அம்மன் சன்னதி ஆகிய பகுதிகளில் கடந்த 40 ஆண்டு காலமாக வாடகை கட்டிடங்களில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்களுக்கு நகராட்சி சார்பில் நிரந்தர கடைகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30 ஆண்டு காலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். காய்கறி வியாபாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி நகராட்சி சார்பில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் வாரச்சந்தை செயல்படக்கூடிய பகுதியில் கடைகள் கட்ட திட்டமிடப்பட்டு அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த சில தினங்களாக தூய்மைப்படுத்தப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அந்த பகுதியில் ரூ.6.42 கோடி மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட 160 கடைகளை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், எம்பி அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிகட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் தற்போது முதற்கட்டமாக தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட ரூ.6.42 கோடி மதிப்பில் 160 கடைகள் கட்டும் பணி தொடங்கியுள்ள நிலையில் இதே போல் வாரச்சந்தை கட்டுவதற்கும் அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வரக்கூடிய நாட்களில் பணி தொடங்க உள்ளது என்றும் அதேபோல் இந்த பகுதியில் காய்கறிகள் பழங்கள் பூமாலை விற்பனை உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் செயல்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Pudukottai market ,
× RELATED புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பழைய பேப்பர், இரும்பு கடை குடோனில் தீ