அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்களை பெற்ற கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில், உடையார்பாளையம், முக்குளம், கரடிக்குளம், கொம்பேடு, இளையபெருமாள் நல்லூர் மற்றும் நெரிஞ்சிக்கோரை கிராமத்தை சேர்ந்த இருளர் மற்றும் காலனித்தெரு மக்கள் 70க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
