×

முதல்வருக்கு சுற்றுச்சூழல் அமைப்பு பாராட்டு வயலில் வைக்கோலை எரிக்க வேண்டாம் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி மார்ச் 6: வயலில் வைக்கோலை எரிக்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடையின்போது, இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் வைக்கோல் வயலிலேயே கிடக்கிறது. சிலர் வைக்கோலை வெளியூர்களுக்கு விற்று வருகின்றனர். சிலர் வைக்கோலை வயலிலேயே தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன், நிலத்திலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிந்துவிடும், நிலம் கெட்டி தன்மையாகும். எனவே வைக்கோலை அப்படியே போட்டிருந்தால் மக்கி உரமாகும், அதைபோல் கருக்காய் தூளையும் வயலில் போடுவதால் நிலம் பொள பொளப்பாக இருக்கும், நிலம் வளமாகும், என தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை