×

முதல்வர் பிறந்தநாள் விழா

சேலம்:சேலம் 31வது வார்டில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  சேலம் மாநகராட்சி 31வது வார்டு திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, திருவள்ளுவர் சிலை அருகே நடந்தது. வார்டு செயலாளர் சையத் இப்ராகிம் தலைமை வகித்தார். வார்டு அவைத்தலைவர் சாகுல், துணைச்செயலாளர் முத்துநகை முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.
இதில், வார்டு பிரதிநிதி அப்துல்ரசாக், நிர்வாகிகள் பைதுல்லா, முரளி, செந்தில், சிவசந்திரன், நவாஸ்சுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Principal Birthday Festival ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்