×

கெளரபூர்ணிமா விழா

சேலம்: சேலம் கருப்பூர் இஸ்கான் கோயிலில், நாளை கௌரபூர்ணிமா விழா நடக்கிறது. அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் (இஸ்கான்) சார்பில், ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் அவதார நாள், நாளை (7ம்தேதி) உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் ேகாயில்களில் கொண்டாடப்படுகிறது. இதன்படி, சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் சார்பில், கௌரபூர்ணிமா என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலை 6 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு குருகுல மாணவர்களின் மங்களாசரணம், 7 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு ஸ்ரீசைதன்யலீலா என்னும் உபன்யாசம் நடக்கிறது. 8.30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கருப்பூர் இஸ்கான் கோயில் வளாகத்தில் நடக்கும் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறவேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Kelarapurnima festival ,
× RELATED கோயில் உண்டியல் திருட்டு