×

புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் பெருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு, நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 10.30 மணிக்கு சுவாமி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறிய தேரில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், அம்பாள் மற்றும் சண்டீகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோக் சக்கரவர்த்தி,ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் ராஜவீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. விழாவையொட்டி பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.


Tags : Minister ,Thirumalabadi Vaidyanatha Swamy Temple ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...