×

நாமக்கல் ஜி.ஹெச்சில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

நாமக்கல்: முதல்வர் பிறந்த நாள் அன்று, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை  மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., அணிவித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதி, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, திமுக சார்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று நாமக்கல் அரசு மருத்துவமனையில், கடந்த 1ம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராணி, நலங்கிள்ளி, நகர செயலாளர்கள் ரானா.ஆனந்த் பூபதி, சிவக்குமார், நகர் மன்ற தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர்கள் பழனிவேலு, கவுதம், நவலடி, தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பொன்.சித்தார்த், கடலரசன் கார்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Namakkal GH ,
× RELATED நாமக்கல் ஜி.ஹெச்சில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்