×

ஊட்டி நகர திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி கொடியேற்றி கொண்டாட்டம்

ஊட்டி:  ஊட்டி  நகர திமுக  சார்பில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  70வது பிறந்தநாளையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஊட்டி  நகர திமுக சார்பில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக ஊட்டி காபி  அவுஸ் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக.  துணை பொதுப்செயலாளர் மற்றும் நீலகிரி  எம்பி ஆ. ராசா பங்கேற்று திமுக கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து  பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்  முஸ்தபா, ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், நகர  துணை செயலாளர்கள் கிருஷ்ணன், இச்சுபாய், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி,  கவுன்சிலர்கள் செல்வராஜ், ரமேஷ், ரீட்டாமேரி, மேரி புளோரினா, வனிதா,  நாகமணி, பிரியா, விஷ்ணுபிரபு, கஜேந்திரன் மற்றும் மஞ்சுகுமார், காந்தல்  ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Birthday ,Ooty City DMK ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி