தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி பெருந்திருவிழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நேற்று காலை நடந்தது. இதில் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். தென்தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு காலை, மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடந்து வந்தது.
விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நேற்று காலை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் முதலில் சுவாமி தேரையும், அதைத்தொடர்ந்து அம்பாள் தேரையும் சிவ பூதகண வாத்தியங்கள் இசைக்க ஒன்றன்பின் ஒன்றாக இழுத்து நிலையம் சேர்த்தனர். முன்னதாக சிறப்பு பூஜைகளை செந்தில் பட்டர், முத்துகிருஷ்ணன் பட்டர், கைலாச பட்டர், சந்திரசேகர் பட்டர் முன்னின்று நடத்தினர். தேரோட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வேங்கடரமணன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.என்.எல். சுப்பையா, உறுப்பினர்கள் சண்முகவடிவு, காலசாமி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன, பாஜ மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, துணைத்தலைவர் முத்துகுமார், மாநில வர்த்தக பிரிவு மகாதேவன், நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, ராமநாதன், ராஜ்குமார், குத்தாலிங்கம்,
கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், பொன்னம்மாள் கருப்பசாமி, லட்சுமணப்பெருமாள், ஜெயலட்சுமி, சுப்பிரமணியன், சுமதி, ஜெயலட்சுமி, பூமாதேவி, இந்து முன்னணி இசக்கிமுத்து, லட்சுமி நாராயணன், திமுக மாவட்டப் பிரதிநிதி ஜெயக்குமார் பாண்டியன், கோபால்ராம், சுப்பிரமணியன், பரமசிவன், கஜேந்திரன், இசக்கி ரவி, சாரதி முருகன், பாலாமணி, ராஜேந்திரன், சங்கரன் வாத்தியார், அதிமுக நகரச் செயலாளர் சுடலை, முத்துக்குமாரசாமி, முருகன்ராஜ், துப்பாக்கிப்பாண்டியன், சுப்புராஜ், மாரிமுத்து, மோகனபெருமாள், காங்கிரஸ் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், வைகை குமார், கண்ணன், சபரி முருகேசன், ஈஸ்வரன், சந்தோஷ், மதிமுக நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர அமைப்பினர், சத்யசாய் சேவா சமீதி அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வலர்கள் தென்காசியின் நான்கு ரதவீதிகளிலும் பத்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர், சர்பத் வழங்கினர். இதே போல் நகர திமுக சார்பில் நகரச் செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான சாதிர் தலைமையில், துணைத்தலைவர் சுப்பையா முன்னிலையில் நிர்வாகிகள் சர்பத் வழங்கினர்.
இதில் நகர நிர்வாகிகள் மணிமாறன், ஷேக்பரீத், பால்ராஜ், ராம்துரை, நடராஜன், பாலசுப்பிரமணியன், மைதீன் பிச்சை, நாகூர் மீரான், வக்கீல் ரகுமான் சாதத், மைதீன், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. நாகசங்கர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் தீயணைப்பு வீரர்கள் ஆயத்த நிலையில் இருந்தனர். மாசி பெருந்திருவிழாவில் இன்று (6ம் தேதி) காலை தீர்த்தவாரியும், மாலை புஷ்பாஞ்சலியும் நடக்கிறது.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பண்பொழியில் உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அறம்வளர்த்த நாயகி அம்பாள் சமேத நகரீஸ்வரமுடையார் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் இரவு சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடந்து வந்தது. 9ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு தேரோட்ட வைபவம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளியதும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து மதியம் 1 மணிக்கு நிலையம் சேர்த்தனர். இதில் பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வார்டு கவுன்சிலர்கள் கணேஷ், மங்கள விநாயகம், வடகரை ராமர், மயில் சுப்பையா மற்றும் பண்பொழி வட்டாரத்தைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். இதையொட்டி அச்சன்புதூர் எஸ்ஐ முத்துபாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
