×

ஆரோவில் அருகே 35 ஏக்கர் மயிலம் பொம்மபுர ஆதீன சொத்துகள் மீட்பு

வானூர்: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள பொம்மையார்பாளையம் மற்றும் குயிலாப்பாளையம் ஆகிய கிராமங்களில் மயிலம் பொம்மபுர ஆதினத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலங்களில் சில இடங்கள் தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மடத்தின் சொத்துகள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஞானம் மற்றும் நில அளவையாளர்கள் ஆகியோர் பொம்மபுர ஆதினத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது மடத்தின் நிர்வாகிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி மித்ரன் தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டக்குப்பம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 நாட்களில் 35 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பிற்கு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வண்டிவழி பாதையை பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத்சிவஞானபாலய சுவாமிகள் அனுமதியோடு ஒதுக்கீடு செய்து லட்சுமிபுரம் பாதை, நியூ கிரியேஷன் பள்ளியிலிருந்து குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை, மாத்தூர் பாதை, அரேக்கா பாதை என 5 பாதைகள் செல்ல மடத்தின் சார்பில் அர்ப்பணிக்கப்படடது.

Tags : Mylam Pommapura Atheena Properties ,Auroville ,
× RELATED ஆரோவில் உதயதின விழாவில் நெருப்பு...