×

ஆட்டுக்கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு வேட்டவலத்தில் பாரதிதாசன் தெருவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் கருகிய ஆட்டுக்கொட்டகை.

வேட்டவலம்:வேட்டவலத்தில் ஆட்டுக்கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். வேட்டவலம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(65). இவர் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே கொட்டகை அமைத்து ஆடுகளை இரவில் பட்டியில் அ டைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஆடுகள் கத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வெளியே வந்தபோது கொட்டகை தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. உடனே விரைந்து சென்று அவர் தீயை அணைத்தார். உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் கடந்த மாதம் 21ம் தேதி இரவு இவரது வீட்டின் அருகே சீனிவா சன் என்பவரின் கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது உரிய நேரத்தில் கண்டறிந்து பொது மக்கள் தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் வெளியே இருக்கும் துணிகள், வைக்கோல் போர்கள் ஆகியவற்றையும் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஆட்டு கொட்டகைக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். நள்ளிரவில் போதை ஆசாமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, இதனை தடுக்க இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடவேண்டும் எனவும், மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bharathidasan Street ,Vettavalam ,
× RELATED அய்யம்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி