தூத்துக்குடி, மார்ச் 5: தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 7ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 14ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 21ம் தேதி கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 28ம் தேதி தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
